செல்வர்க்கு அழகு
ADDED :928 days ago
செல்வந்தர் ஒருவரை சந்திக்க சென்றார் நபிகள் நாயகம். அப்போது செல்வந்தர் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்தார். அதைப் பார்த்தவர் “உங்களிடம் அதிகமான செல்வம் உள்ளதுதானே” எனக் கேட்டதற்கு, ‘‘ஆம்’’ என்றார்.
‘‘இவ்வளவு செல்வங்களை கொடுத்திருந்தும், ஏன் கஞ்சத்தனமாக இருக்கிறீர்கள்’’ எனக்கேட்டார்.
பார்த்தீர்களா... சிக்கனம் என்பது வேறு. கஞ்சத்தனம் என்பது வேறு. செல்வந்தராக இருப்பவர் பிறருக்கு உதவ வேண்டும். அதுதான் அவர்களுக்கு அழகு.