வேண்டாம் பொறாமை
ADDED :883 days ago
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ஒன்றை பார்த்தேன் என்றது. ஒவ்வொரு முறையும் காற்றை உறிஞ்சி கொண்டு இவ்வளவு பெரியதாக இருக்குமா எனக் கேட்டுக் கொண்டே இருந்தது பெரிய தவளை. முடிவில் பெரியதாக காட்ட முயன்று வயிறு வெடித்து செத்தே போனது. பொறாமையால் இறந்த தவளை போல மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பிடித்திருக்கும் எலும்புருக்கி நோய் பொறாமை என்கிறது பைபிள்.