செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :1126 days ago
செஞ்சி: வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு பலாசுளைகளால் அலங்காரம் செய்திருந்தனர். செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு அமாவாசை தோறும் பக்தர்கள் சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து வருகின்றனர். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் செய்து, பலாசுளைகளால் அலங்காரம் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.