உவரியில் மழைவேண்டி திருவாசகம் முற்றோதுதல்
ADDED :4758 days ago
திசையன்விளை: உவரி கோயிலில் மழைவேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மழைவேண்டி மற்றும் கூடன்குளம் அணுஉலை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி நெல்லை சிவநெறி அருள்பணி மன்றம் சார்பில் தேவாரம், திருவாசகம் முற்றோறுதல் நிகழ்ச்சி நடந்தது. மன்ற தலைவர் முத்தையாபிள்ளை தலைமையில் 54 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வர பூஜை செய்தனர். தொடர்ந்து தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிரார்த்தனை நடந்தது.ஏற்பாடுகளை கோயில் பரப்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.