வராஹியை வழிபட.. மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை!
                              ADDED :895 days ago 
                            
                          
                           வராஹியை வழிபட ஏற்ற திதி பஞ்சமி. வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியன்று வழிபட்டால் உடனடியாக நற்பலன் கிடைக்கும். வாராஹி அர்ச்சனை மந்திரங்களில் ‘ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ’ என்றொரு வரி உண்டு. ஆஷாட பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் விருப்பமுடன் ஏற்பவள் என்பது பொருள். பஞ்சமி திதிக்கு உரியவள் என்பதால் ‘பஞ்சமி’ என்றும் பெயருண்டு. பஞ்சமியன்று விளக்கேற்றி வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை, நிலப்பிரச்னை தீரும். மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.