விதையும் மந்திரமும்
ADDED :883 days ago
ஒரு விதையானது முளைத்து நற்பலன் தர வேண்டுமானால்... அதற்குரிய காலமும் இடமும் அவசியம். அது தரமான விதையாக இருந்து விவசாயம் தெரிந்தவரின் கையில் கிடைத்தால் போதும். அதை விதைத்து நீர்பாய்ச்சி, உரம் வைத்து ஆடு, மாடுகளிடம் இருந்து அவர் பாதுகாத்து அப்பயிரினை நன்கு வளர்ப்பார். அதைப்போலத்தான் தெய்வத்தின் மூலமந்திரம். அதை ஒரு குருநாதர் மூலமாக உபதேசம் பெற்று மனதினால் உள்வாங்கி தினசரி முறையாக தியானிக்கும் போது அது நிச்சயம் பயிரினைப்போல அது நற்பலனை தரும்.