திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1239 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு, காலையில் சிறப்பு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று இரவு நடந்த சிறப்பு பூஜையில் (உற்சவமூர்த்தி) உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.