காசி விசுவநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :890 days ago
வத்தலக்குண்டு: குரு காசி விசுவநாதர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. சிவனுக்கு சண்டியோகம் யாகம் நடத்தி வழிபாடு நடத்தப்பட்டது. கும்ப ஆராதனை செய்யப்பட்டது. கலச பூஜைகள் நடந்தன. பொதுமக்கள் சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டனர். 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி ரகு செய்திருந்தார்.