சோமவார வழிபாடு; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1178 days ago
கோவை : கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் வைகாசி மாத இரண்டாவது சோமவார திங்கட்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.