கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED :881 days ago
குள்ளஞ்சாவடி: இடங்கொண்டான்பட்டு கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
குள்ளஞ்சாவடி அடுத்த, இடங்கொண்டான்பட்டு கிராமத்தில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ சபாநாயகர் சமேத, ஸ்ரீ பெரியநாயகியம்மன், ஸ்ரீ கஸ்தூரி அம்மன் ஆலய தீமிதி திருவிழா, நேற்று நடந்தது. கடந்த, 18ம் தேதி தொடங்கிய மகோற்சவம், பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல், அம்மன் ஊர்வலம், கஸ்தூரி அம்மனுக்கு சாகை வார்த்தல், இரவு வீதி ஊர்வலம், திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ அக்னிகுமாரத்தி ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன. நேற்று மாலை, விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நடைபெற்றது. இதில் இடங்கொண்டான்பட்டு மற்றும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், இடங்கொண்டான்பட்டு கிராமவாசிகள் செய்திருந்தனர்.