உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு டான்டீ தேயிலைத்தோட்டம், திருவள்ளுவர் நகரில் முத்துமாரியம்மன் கோவில் 4ம் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி காலை  மகா கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.  தொடர்ந்து தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்தல்,யாக சாலை பூஜைகள், கோபுர கலசம் வைத்தல் நடந்தது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தலைமை குருக்கள் அகமபிரவின விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையில்  மகா கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. இதில் டான்டீ அதிகாரிகள், ஊழியர்கள், தோட்ட தொழிலாளர்கள், பக்தர்கள் திரளாக  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !