உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்முகசுந்தரபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சண்முகசுந்தரபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஸ்ரீதேவி, பூமாதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் ஜூர்ணோ தாரண மஹா சம்ப்ரோக்ஷண விழா நடந்தது.

மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள், புனித தீர்த்த குடம் அழைப்பு, கிராம தேவதை வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, சந்திர பிரதிஷ்டை, கோபுர கலசங்களில் தானியம் சேர்த்தல் மற்றும் முளைப்பாரி அழைப்பு நடந்தது. இரண்டாம் நாள் பூஜைகள் புண்ணியாக வாஜனம், கோபுர கலச பிரதிஷ்டை, 2, 3ம் கால யாக பூஜைகள் நடந்தது. 3ம் நாளில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், நாடி சந்தானம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நிகழ்ச்சிகளுக்கு பின் ஸ்ரீ காளியம்மன் கோயில் கோபுர கலசம் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் விமான கோபுர மகா சம்ப்ரோக்ஷணம் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வானில் வட்டமிட்ட கருடனை வணங்கி பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை ரத்தினவேல், சின்ன நாட்டாமை சௌந்தரராஜன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், அ.ம.மு.க., ஒன்றிய இணை செயலாளர் அய்யணன், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் குருசாமி, ரியல் எஸ்டேட் குமார், பியூரவி செராமிக்ஸ் ஜெகதீஸ்வரன், நடத்துனர் அண்ணாத்துரை, ஏ.எஸ்.பயோட்ரானிக்ஸ் சூரத் மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !