உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியாவுடையார் கோயிலில் வருடபிஷேகம்

பழநி பெரியாவுடையார் கோயிலில் வருடபிஷேகம்

பழநி; பழநி கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில் வருடாபிஷேகத்தில், 108 சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான கோதைமங்கலம், சண்முக நதிக்கரையில் பெரியாவுடையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று வருடாபிஷேகம் நடைபெற்றது. 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜையை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் நிகழ்த்தினர். இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சித்தநாதன் அண்ட் சன்ஸ் அசோக்குமார், செந்தில்குமார், சதீஷ்குமார், சரவணபவன் உரிமையாளர் நாதன், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ், பழநி, 14வது சிறப்பு காவல் பயிற்சி படை தளவாய் முத்துகருப்பன், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !