அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.2.16 கோடி உண்டியல் காணிக்கை
ADDED :866 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2.16 கோடி ரூபாயை, உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், இரண்டு கோடியே, 16 லட்சத்து, 4,221 ரூபாய், 165 கிராம் தங்கம், 2,213 கிராம் வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.