கடலுார் பாடலீஸ்வரர் வைகாசி விழா துவக்கம்: ஜூன் 2ல் தேரோட்டம்
ADDED :922 days ago
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா விமர்சையாக நடை பெற்று வருகின்றது. இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் வைகாசி பெருவிழா கொடிஏற்றப்பட்டது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 2ம் தேதி நடக்கிறது.