அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் துவங்கியது
ADDED :832 days ago
மதுரை: அழகர்கோவில், கள்ளழகர் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் துவங்கியது.மதுரை அழகர்கோவில், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா சிறப்பாக தொடங்கியது. விழாவில் பல்லக்கில் தேவியர்களுடன், கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி ஆடி வீதிகள், பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று முதல் பத்து நாட்கள் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.