உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூர் சத்தியஞான சபையில் திருஅருட்பா இசை விழா நிறைவு

வடலூர் சத்தியஞான சபையில் திருஅருட்பா இசை விழா நிறைவு

வடலூர்: வடலூர் சத்தியஞான சபையில் 38வது திருஅருட்பா இசை நிறைவு விழா நேற்று இரவு நடந்தது. வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் திருஅருட்பா இசை சங்கம் சார்பில் ஆண்டுதோறும், மே மாதம் மூன்று நாட்கள் இசை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா 24ம் தேதி காலை 7 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு இசைச்சங்க செயலாளர் டாக்டர் அமுதவடிவு விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்‌. தொடர்ந்து மூன்று நாட்களாக சொற்பொழிவு, வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு நிறைவாக சீர்காழி சிவசிதம்பரம் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஅருட்பா இசை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !