உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹனுமந்த வாகனத்தில் வைகுண்டவாச பெருமாள் வீதியுலா

ஹனுமந்த வாகனத்தில் வைகுண்டவாச பெருமாள் வீதியுலா

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி, ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு உற்சவர் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தார்‌. தொடர்ந்து வரும் 30ம் தேதி இரவு கருட வாகன மகோற்சவமும், ஜூன் 1ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், 3ம் தேதி சகடை தேரோட்டமும் நடை பெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !