உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யலூரில் கோயில் திருவிழா; பக்தர்கள் அக்கினிச்சட்டி ஊர்வலம்

அய்யலூரில் கோயில் திருவிழா; பக்தர்கள் அக்கினிச்சட்டி ஊர்வலம்

வடமதுரை; அய்யலுாரில் சக்திவிநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், முன்னடிக்கருப்பணசுவாமி, சீதாராமர, காசிவிஸ்வநாதர் கோயில் திருவிழா நேற்று இரவு துவங்கியது. முத்துநாயக்கன்பட்டி ஜோடனை மேடையில் அம்மன்கள் கரகம் பாலித்து அலங்கார ரதத்தில் கோயில் வந்தது. இன்று காலை மாவிளக்கு அழைக்கப்பட்ட பின்னர், பூஜாரிகள், பக்தர்கள் அக்கினிச்சட்டியுடன் ஊர்வலமாக களர்பட்டி சன்னதிக்கு வந்து பொங்கல் வைத்தனர். பாரம்பரிய முறைப்படி கருப்பணசுவாமி வேடமிட்டு பக்தர்கள் பாரி வேட்டை ஆடினர். நாளை முளைப்பாரி ஊர்வலம் அம்மன்கள் கங்கை செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை ஊர் நாயக்கர் சுப்பையாநாயுடு, களர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, காமராஜ் நகர், சந்தைப்பேட்டை, நாகப்பபிள்ளைகளம், அண்ணாநகர், குறிஞ்சி நகர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !