பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம்!
ADDED :4758 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், திருப்பவித்ரோத்சவம் நேற்று துவங்கியது. புதுச்சேரி-திண்டிவனம் நான்கு வழிச்சாலையில், பஞ்சவடீயில் அமைந்துள்ள, 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவிலில், திருப்பவித்ரோத்சவம் நேற்று துவங்கியது. இந்த விழா 4 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு, பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. புண்ணியாக வாசனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, அக்னி மதனம், கும்ப ஸ்தாபனம் ஆகிய பூஜைகள் நடந்தன. உலக நன்மை, மழை, வெள்ளாமை, உலக அமைதி, எங்கும் எதிலும் நன்மையும், வெற்றியும் தழைத்தோங்க நடக்கும் இந்த வேள்வி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.