உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் பச்சைவாழியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திண்டிவனம் பச்சைவாழியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த பாங்கொளத்துார் ஸ்ரீமன்னாத சுவாமி சமேத பச்சைவாழி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இக்கோவிலில், பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7:30 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மதியம் 12:00 மணியளவில் வாழ்முனீஸ் வரருக்கு பாதபூஜை அபிேஷகமும், ஆராதனையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சக்திகரகம், அக்னிகரக நிகழ்ச்சி நடந்தது. இரவு சுப்ரமணிய சுவாமி வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிமிதித்தல் இன்று 30ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உற்சவ கமிட்டியினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !