காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி அடுத்துள்ள சுருட்ட பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பள்ளி கொண்டேஸ்வர ஸ்வாமியை சென்னை (ஹைகோர்ட்) உயர் நீதிமன்ற நீதிபதி தாரணி மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி ஆர்டிஓ ராமராவ் சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் பள்ளி கொண்டேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாரணி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏவிஎம் முனிச்சந்திரா ரெட்டி என்கிற பாலாஜி ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர்.தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள பிரதோஷ மண்டபத்தில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.