உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்எடையாளம் கருமாரியம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்

மேல்எடையாளம் கருமாரியம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்

செஞ்சி: மேல்எடையாளம் கருமாரியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த மேல்எடையாளம் கிராமத்தில் கருமாரியம்மன், பூவாத்தம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ம் தேதி காப்பு கட்டுதலும், மலைமீதுள்ள அய்யனராப்பனுக்கு ஊரணி பொங்கலும் சிறப்பு வழிபாடும் நடந்தது. 23ம் தேதி முதல் கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் இரவு சாமி வீதி உலவும் நடந்து வந்தது. 30ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ்வார்த்தலும் நடந்தது. அன்று மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருமாரியம்மன், பூவாத்தம்மனை தேரில் ஏற்றி வடம் பிடித்தல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். விழா ஏற்பாடுகளை மேல்எடையாளம் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !