உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும்

இன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும்

முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினத்தை வைகாசி விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும்  பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில்  கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார்  அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும். புத்தன் (சித்தார்த்தன்)  அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர். வைகாசி விசாகத்தன்று முருகனை வழிபட பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர்,  பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !