விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :916 days ago
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் நுழைவு வாயிலில் உள்ள நந்திக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் அம்பாள் மற்றும் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்குகோவில் சிவாச்சாரியர் சக்தி சந்திரசேகரர் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.