வீர மாத்ரே அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருப்புகழ் இசை வழிபாடு
ADDED :867 days ago
கோவை; ராம்நகரில் எஸ்.என்.வி., கல்யாண மண்டபத்தில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு திருப்புகழ் இசை வழிபாடு நடைபெற்றது.
கோவை, வடவள்ளி மாதவ் நகரில் உள்ள சாதனா சதன் சத்சங்க மையம் சார்பில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் திருப்புகழ் இசை வழிபாடு, கோவை மருதமலை ரோடு திருவள்ளுவர் நகரில் இருக்கும் ஸ்ரீ வீர மாத்ரே அம்மன் கோவிலில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்புகழ் பாடல்கள் பாடி இசை வழிபாடு செய்தனர். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.