உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி கருட சேவை

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி கருட சேவை

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வசந்தோற்சவ விழாவில் கருட சேவையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. விழாவின் 5ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேகளீச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. 11:00 மணிக்கு ஆழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகளுடன் புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, திவ்ய பிரபந்த சாற்றுமறை, பக்தர்களுக்கு பிரசாத வினியோகிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !