முனீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா
ADDED :872 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் அழகப்பா பூங்காவில் உள்ள ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் குடமுழக்கு விழா நேற்று நடந்தது. இக்கோவில் உள்ள பாலவிநாயகர், பாலமுருகன், காளியம்மன் நாகர், முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் குடமுழக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கருப்புகுருக்கள் தலைமையில் இரண்டு கால யாக பூஜகளை தொடர்ந்து கருப்பு குருக்கள் அபிஷேகம் செய்தார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.