வால குருநாத லிங்கேஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :1045 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கிருஷ்ணாபுரம் அங்காள ஈஸ்வரி உடனுரை வால குருநாத லிங்கேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மஞ்சள், பால், இளநீர், தயிர், நெய், தேன், கனி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. நந்திகேஸ்வரர், லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது. நாமாவளி பஜனை நடந்தது. பக்தர்களுக்கு நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.