பவளமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :930 days ago
மேலுர்: ரெங்கசாமிபுரத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பவளமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று நடைபெற்றது. நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் தீச்சட்டி ஏந்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு பக்தர்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இத் திருவிழாவில் ரெங்கசாமி புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.