உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முள்ளிபட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழா; துரியோதனன் படுகளம்

முள்ளிபட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழா; துரியோதனன் படுகளம்

திருவண்ணாமலை ; முள்ளிபட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிபட்டு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி முக்கிய நிகழ்வாக துரியோதனன் படுகளம் நடந்தது. கோவில் அருகில் களிமண்ணால் துரியோத னன் உருவம் வடிவமைத்திருந்தனர். நாடக கலைஞர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடித்து காட்டினர். தொடர்ந்து பாஞ்சாலி சபதம் நிகழ்ச்சியும் நடை பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !