மாசாணி அம்மன் கோயில் பால்குட விழா
ADDED :1046 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் சக்தி மாசாணி அம்மன் கோயில் பூ குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பால்குட விழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் இன்று காலை பாரனுர் ஆத்தி அடியான் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்துச் சென்று மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அதிசய ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.