பாலமேடு கோயில் விழா ; பொங்கல் பானையுடன் ஆண்கள் ஊர்வலம்
ADDED :864 days ago
பாலமேடு: பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்திவிநாயகர் கோயில் பொங்கல் உற்ஸவ விழா மே 26ல் துவங்கியது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், மேளதாளத்துடன் அம்மன் கோயிலுக்கு பொங்கல் பானை புறப்பாடு நடந்தது. இதில் பாரம்பரிய வழக்கப்படி மண் பானையில் புனித நீர் சுமந்து ஆண்கள் மட்டும் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அம்மன் திருக்கண் திறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.