உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லான் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருடசேவை

நல்லான் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருடசேவை

செஞ்சி:நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.

செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 8 மணிக்கு பிரபந்த பஜனை குழுவினருடன் திருவேங்கடமுடையான் கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது. இரவு 7.00 மணிக்கு வடமாதிமங்கலம் புலவர் கோவிந்தசாமியின் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவும், தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை வைணவ மகாசபை நிர்வாகிகள் சேகர், அறிவழகன், கதிரவன், அண்ணாதுரை, பாண்டியன், பச்சையப்பன் உள்ளிட்டவர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !