தேனூரில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த களரி திருவிழா
ADDED :864 days ago
சோழவந்தான்: மேற்கு ஒன்றியம் தேனூரில் பிள்ளைக்கு பாத்தியப்பட்ட பட்டத்தரசியம்மன் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி களரி திருவிழா கடந்த மே.26ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து நேற்று இரவு கோயிலில் இருந்து சாமி பெட்டியை வைகையாற்றிற்கு கொண்டு சென்றனர். கிராமத்தினருக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து பூசாரி பாண்டி தலைமையில் சக்தி கரகம், சாமி பெட்டிகள் சுமந்து சாமியாடிகளுடன் ஊர்வலம் வந்தனர். இதையடுத்து அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கோயில் நிர்வாகிகள், கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.