உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியங்காவு புஷ்கலாதேவி கோயில் புனரமைப்பு ;அதிகாரிகள் ஆலோசனை

ஆரியங்காவு புஷ்கலாதேவி கோயில் புனரமைப்பு ;அதிகாரிகள் ஆலோசனை

மதுரை; ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலாதேவி கோயிலில் புனரமைப்பு மற்றும் கும்பாபிேஷகம் நடத்துவது குறித்து தேவஸம்போர்டு அதிகாரிகளுடன் மதுரை சவுராஷ்டிரா சமூக பிரமுகர்கள் ஆலோசனை நடத்தினர்.


இக்கோயிலை புனரமைத்து கும்பாபிேஷக பணிகளை செய்ய முடிவு செய்து தேவபிரசன்னம் மற்றும் அதற்கான பரிகார பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆரியங்காவு கோயிலில் நடந்தது. திருவாங்கூர் தேவஸம்போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன், சப்குரூப் அலுவலர் விஜேஷ் முன்னிலை வகித்தனர். மதுரை முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க மூத்த தலைவர் கே.ஆர்.ராகவன், எஸ்.கே.ரவிச்சந்திரன், ஜெ.எஸ்.கே.கணேஷ், ஜே.கே.விஜிகுமார், எஸ்.எம்.சுரேஷ்கண்ணா, கோயில் ஆலோசனை குழு தலைவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, செயலாளர் சுஜாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பணிகளை ஒருமித்து நடத்துவதற்கான கடிதத்தை தேவஸம்போர்டு அதிகாரிகளிடம் சமூக பிரமுகர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !