உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா விநாயகர் கொடியேற்றம்

நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா விநாயகர் கொடியேற்றம்

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் கொடியேற்றம் நேற்று நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்தேர் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆனித்தேர் திருவிழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. ஜூலை 2ம் தேதி ஆனித் தேரோட்டம் நடக்கிறது. ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன் விநாயகர் கோயில் கொடியேற்றம் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு விநாயகர் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !