கோவை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
ADDED :848 days ago
கோவை ; ஈச்சனாரி கற்பகம் கலைக்கல்லூரி எதிரில் ஜெகதீஷ் நகரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை இவ்விழாவையொட்டி காலை கணபதி ஹோமம், கலசத்தில் பூஜை, உப தேவதை கலச பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெற்றனர். தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.