உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரத்தில்‌ கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் சேவை

எமனேஸ்வரத்தில்‌ கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் சேவை

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவ விழாவில் கருட வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார். தொடர்ந்து அவதார சேவை நடந்தது. இக்கோயிலில் ஜூன் 3 தொடங்கி வைகை ஆற்றில் விழா நடக்கிறது. இதன் படி நேற்று முன்தினம் தங்க கருட வாகனத்தில் பரமபத நாதனாக பெருமாள் அருள் பாலித்தார். பின்னர் இரவு முழுவதும் பெருமாள் ராமர், வாமனன், நரசிம்ம, கல்கி, மற்றும் மோகினி அவதாரங்களில் சேவை சாதித்தார். நேற்று இரவு அனுமன் வாகனத்தில் ராம அவதாரத்தில் அருள் பாலித்தார். இன்று கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி நாளை (ஜூன் 9) காலை கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !