உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சித்தி, புத்தியுடன் விநாயகர் திருக்கல்யாணம்
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சித்தி, புத்தி தேவியருடன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைந்துள்ளதால் இங்குள்ள விநாயகர் வெயிலுகந்த விநாயகர் எனப்படுகிறார். விநாயகர் கோயிலில் நேற்று காலை 11:35 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மாலை 6:30 மணிக்கு சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. சதுர்த்தி விழாவின் போது எட்டாம் நாளில் ஆண்டுக்கு ஒரு முறை இரு தேவியருடன் திருக்கல்யாணம் இந்த விநாயகருக்கு நடக்கும். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வெள்ளி கேடயம் வாகனத்தில் இரு தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் வீதி உலா வந்தார்.