மணிகண்டேஸ்வரர் கோயிலில் பாலாலய விழா
ADDED :919 days ago
சோழவந்தான்; கீழமாத்துாரில் உள்ள 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த உமாமகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோயிலில் நேற்றுமுன்தினம் பாலாலயம் நடந்தது. அர்ச்சகர் சுந்தரேஸ்வரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக பூஜைகள் செய்து சுவாமிகளை மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தனர். சரக ஆய்வர் இளவரசி, நிர்வாக அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, வசந்த் பங்கேற்றனர். திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.