அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
அரகண்டநல்லூரில் பிரசித்தி பெற்ற பழமையான அதுல்ய நாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை பராமரிப்பின் கீழ் செயல்படும் இக்கோவிலில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை கண்டாச்சிபுரம் சரக ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், செயல் அலுவலர் சூரியநாயகனன், எழுத்தர் மிரேஷ்குமார், கோவில் அர்ச்சகர் பரணி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது. ரூ.39,898 வசூல் ஆனது. தற்பொழுது இக்கோவிலில் விழாக்கள் மற்றும் பூஜைகள் பக்தர்களின் உதவியுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதால், வரும் நாட்களில் கோவிலில் வருவாய் உயரும் நிலை உள்ளது. எனவே கோவிலை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.