சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :856 days ago
திருத்தணி : திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் ஏப். 23ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன. நேற்று, 48வது நாள் மண்டலாபிஷேகம் மற்றும் நிறைவு விழா ஒட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 7 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.