சுந்தரமூர்த்தி விநயாகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :856 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்திஸ்வரம் ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பூர்த்தியை முன்னிட்டு விநாகருக்கு சந்தனக்காப்பு அலங்கரம் நடைபெற்றது. காரைக்ககால் கோவில்பத்து நித்திஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவை முன்னிட்டு சம்பத்ரா அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் விநாயகருக்கு பல்வேறு திரவங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை மிகவிமர்ச்சியாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிப்பட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.