வேலூரில் கும்பாபிஷேகம்
ADDED :856 days ago
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ச.வேலூர் கிராமத்தில் உள்ள விநாயகர், உச்சிமஹா காளியம்மன், முத்தாலம்மன், கருப்பணசாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் கன்னிமார் கோவிலில் மகா கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜை நடந்தது. இரண்டாம் நாள் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மூன்றாம் கால பூஜை, நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.