உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டி.கூடலூர் ஸ்ரீ பூவாளம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை விழா

டி.கூடலூர் ஸ்ரீ பூவாளம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை விழா

குஜிலியம்பாறை: டி.கூடலூர் அருள்மிகு ஸ்ரீ பூவாளம்மன் திருக்கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. கும்பாபிஷேகம் நடந்ததிலிருந்து 48 நாட்களாக கிராமப் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் சார்பில், கோயிலில் அன்னதானம் சிறப்பு பூஜைகள் நடந்தது. மண்டல பூஜையை தொடர்ந்து காலை முதல் சிறப்பு பூஜை, 108 சங்கு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. திருப்பணி குழு தலைவர் ஓம் சக்தி டெக்ஸ் உரிமையாளர் பழனிச்சாமி, கிராம பெரிய தனம் மாரிமுத்து ஐயர், நாட்டாமை சிவபெருமாள், எட்டுப்பட்டி நாட்டாமைகள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !