டிக்கெட் மையம் இல்லை; ராமேஸ்வரம் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் டிக்கெட் மையங்கள் இல்லாமல், பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், இன்று ஞாயிறு என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் கட்டணம், இலவச தரிசனம் என இரு வரிசையில் பக்தர்கள் நின்றனர். இதில் கட்டண வரிசையில் நின்ற ஏராளமான பக்தர்களுக்கு ஒரு டிக்கெட் மையத்தில் ரூ.100, 200 டிக்கெட்டை ஒரு ஊழியர் மட்டும் கொடுத்தார். இதனால் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து டிக்கெட் வாங்கி, தரிசனம் செய்யும் அவலம் ஏற்பட்டது. அப்போது பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அங்கிருந்த இரு ஊர்க்காவல் படை காவலர்கள், பெரும் சிரமத்துடன் சமரசம் செய்தனர். கட்டண வழியில் தடுப்பு வரிசை வேலி அமைத்த கோயில் நிர்வாகம், கூடுதல் டிக்கெட் மையங்கள் அமைக்காதது ஏன். எனவே பக்தர்கள் நலன் கருதி கூடுதல் டிக்கெட் மையங்கள் அமைத்து, அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க முன் வரவேண்டும்.