கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1216 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடுபகுதியில் உள்ள பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் துவாதசி திதியை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பெருமாளின் பாதம் அருகில் லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், பூவராகப் பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.