சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியீடு
ADDED :854 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியீட்டு விழா மலர்க்குழு தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்தது. கோயில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலை வகித்தார். செயலாளர் தனுஷ்கோடி வரவேற்றார். திருப்பணிக்குழு தலைவர் ராம.அருணகிரி முதல் பிரதியை வெளியிட மலர்க்குழு துணை தலைவர் ராமசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். விழாவில் ஒருங்கிணைப்பாளர் அழகப்பன், உறுப்பினர்கள் அம்பலமுத்து, தருமன், உதயகுமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமாறன் நன்றி கூறினார்.