வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :942 days ago
மேட்டுப்பாளையம்: வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு திருமஞ்சனம், வில்வ பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம், தயிர், நெய், இளநீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகையான வாசனை திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பூசாரி ஜோதி வேலவன், சுவாமிக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தார். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.